புதிய பஸ் நிலைய கட்டுமான பணி தொடக்கம்

தக்கலையில்

Update: 2024-10-12 15:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் தக்கலையில் காமராஜர் பேருந்து நிலைய பழமையான கட்டிடங்கள் பழுதான நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாக முடிவு செய்தது. பஸ் நிலையத்தை  நவீனப்படுத்த 6. 39 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.         இதற்கான பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி தலைவர் அருள் சோபன் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  நகர்மன்ற  உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தில் 11 பஸ்கள் வந்து நிற்கும் வகையிலும், தரை தளத்தில் 602 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் 607 சதுர மீட்டரிலும் கட்டங்கள் இடம் பெற்று வருகிறது. இதில் 15 கடைகள், உணவு விடுதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, போக்குவரத்து கழக அலுவலகம்  இடம்பெறுகின்றன. நான்கு சக்கர வாகனங்கள் ஆறும்,  இருசக்கர வாகனங்கள் 110-ம் நிறுத்தி வைக்க  இடவசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News