நாமக்கல் ஏகாம்பரஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா!- குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா!

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்,அம்மனுக்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-10-12 15:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் தட்டாரத்தெருவில் ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பத்து நாள் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான இன்று சனிக்கிழமை விடியற்காலையில் நடை திறக்கப்பட்டு, ஏகாம்பரஈஸ்வரர் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில், சிறப்பு பூஜை நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி... தட்டாரத் தெரு,மஜீத் தெரு,ரங்கர் சன்னதி தெரு, பிரதான சாலை, நேதாஜி சிலை வழியாக திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். அப்போது, சிறப்பு மகாதீபாரதனை செய்யப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News