ஆவுடையார்கோவில் சுந்தரம்காலணியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. மக்கள் ஒரே வீட்டில் தஞ்சம் புகும் அவல நிலையில் உள்ளனர். மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் குளம்போல் காட்சி அளிக்கிறது. மழைநீர் தேங்குவதால் விஷப்பூச்சி, பாம்புகள் வருவதால் மக்கள் அபாயத்திலும் வசிக்கின்றனர். உடனடியாக சுந்தரம் காலணியில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.