விராலிமலை: விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்த (22). இவர் செல்வதற்காக விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது தனது பாக்கெட் டில் இருந்த செல்போன் திருட்டுப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ். அருகில் நின்றுக் கொண் டிருந்த நபரிடம் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகமடைந்த மோகன்ராஜ், நண்பர் உதவியுடன் அந்த நபரை பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் திருச்சி காஜாபேட்டை கீழ கிருஷ்ணபுரத்தை சேர்ந்த பாலசுப் பிரமணியன்(56) என்பதும், மோகன்ராஜ் செல்போனை திருடியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீ சார் அவரிடம் இருந்து 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பாலசுப்பிரமணியன் மீது ஏற்கனவே திருச்சி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலு வையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.