நாமக்கல் கவிஞர் நூலகத்தில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா!

சிறப்பு விருந்தினராக நாமக்கல் தமிழ் சங்க பொருளாளர் வெங்கடேசன் அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து விருது வழங்கி பாராட்டினார்.

Update: 2024-10-15 13:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முன்னாள் பாரத நாட்டின் குடியரசுத்தலைவர் மாணவர்களின் வழிகாட்டி டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் நடைபெற்றது.நிகழ்வுக்கு நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். நூலக வாசகர் வட்டத்தலைவர் டி.எம்.மோகன் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் தமிழ் சங்க பொருளாளர் வெங்கடேசன் அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து விருது வழங்கி பாராட்டினார். வீசானம் கிராமத்தில் சிறப்பாக பணியாற்றி ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு கிராமத்தை பசுமையாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் நாச்சிமுத்து, புத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பசுமையை காக்க உழைத்திடும் ராஜ்குமார் குழுவினருக்கும் "டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை நாயகன் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சுற்றுலா அலுவலர் அபாரஜிதன் கலந்து கொண்டு இயற்கையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரகுநாத் விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் மரக்கன்று வழங்கி மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பற்றி எடுத்துக்கூறி அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி எடுத்துக்கூறினார். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வுக்கு மாவட்ட சுற்றுலா துணை அலுவலர் முத்துசாமி, கந்தசாமி, சுப்பிரமணி, துரைராஜ், முருகன், கமால்பாஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இறுதியில் நூலகப் பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Similar News