நாமக்கல்: புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!

செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும் என்பது ஐதீகம்.

Update: 2024-10-15 14:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் தட்டார தெருவில் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்தி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பால், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்கள்,மிருகசிரிடம் ,சித்திரை, அவிட்ட நட்காத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும் என்பது ஐதீகம்.

Similar News