கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதி ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்
கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதி ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்
கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதி ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதி ஒடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடம்பூர் மலைப்பகுதி கிராமங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் கடம்பூர் மலைக் கிராமங்களான குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தால் ஒடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடம்பூர் - மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என இரு பள்ளங்களிலும் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காலங்களில் இரு பள்ளங்கள் வழியாக காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் ரோடு சேறும் சகதியுமாக மாறியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன மழை காரணமாக மாக்கம்பாளையம் மலை கிராமத்திற்கு அருகேயுள்ள அருகியம் புதூர் ஒட்டிய வனப்பகுதியில் மழைநீர் காட்டாறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைக் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.