உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பரமத்திவேலூர் கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் வட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-17 14:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், பரமத்தி வேலூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசின் சேவைகள், நலத்திட்டங்கள், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு தற்பொது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் இன்று காலை 9.00 மணி முதல் பரமத்தி வேலூர் வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, இந்த கள ஆய்வின் மூலம் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் குறித்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்).கு.செல்வராசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News