உதகையில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் திருக்கோவிலின் பல லட்ச ரூபாய் பணத்தை பேரூர் ஆதீனம் கையாடல் செய்ததாக கோவில் நிர்வாகத்தினர் புகார்..
உதகையில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் திருக்கோவிலின் பல லட்ச ரூபாய் பணத்தை பேரூர் ஆதீனம் கையாடல் செய்ததாக கோவில் நிர்வாகத்தினர் புகார்..
உதகையில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் திருக்கோவிலின் பல லட்ச ரூபாய் பணத்தை பேரூர் ஆதீனம் கையாடல் செய்ததாக கோவில் நிர்வாகத்தினர் புகார்.. ஆதீனத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து பல முறை கோவிலை பூட்டி பொது மக்கள் வர விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு... நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார், 5 ஏக்கர் நிலப்பரப்பில் துளசிமடம் எனப்படும் தட்சிணாமூர்த்தி மடம் அமைந்து உள்ளது. கடந்த, 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதன்பின்னர் பேரூர் ஆதீனம் மடாதிபதி மருதாச்சல அடிகளார், தட்சிணாமூர்த்தி மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், அவரை நீக்கி, மதுரை சொக்கலிங்க தம்பிரான் மடாதிபதி, நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார். ஐகோர்ட்டில் வழக்கு இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மடாதிபதி மருதாச்சல அடிகளார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் கோவில் நிர்வாக பணிகளை கவனிக்கலாம் என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க வரவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கோவில் நிதியை கையாடல் செய்ததாக கோவில் அறங்காவலர் குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதை குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அறங்காவலர் குழு ரங்கசாமி தெரிவிக்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை நிர்வகிக்க ஆளில்லாததால் பேரூர் ஆதினத்திடம் முறையிட்டோம் இந்த ஆலயத்தை நல்லபடி நடத்தி கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டோம் இதன் அடுத்து இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வந்த பேரூர் ஆதீனம் சிறிது சிறிதாக கோவிலை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் பேரூர் ஆதீனத்திற்கும் கோவில் அறங்காவலர் குழு விற்கும் பனிப்போர் நடந்து வந்தது. இதில் பலமுறை ஆதினத்தை சேர்ந்தவர்கள் கோவிலை பூட்டியும் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அராஜக செயலில் ஈடுபட்டு வந்தனர் இதனை எதிர்த்து பொதுமக்களே பலமுறை போராட்டத்தை நடத்தியதாகவும் கூறினர் இது எப்படி இருக்க தங்களது அறங்காவலர் வங்கி கணக்கிலிருந்து 18 லட்சம் ரூபாய் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கையாடல் செய்திருப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கை வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்களை கையில் போட்டுக்கொண்டு தங்கள் கையெழுத்து இல்லாமல் காசோலைகளை தயார் செய்து கோவையில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளதாகவும், மேலும் கோவில் காவலாளி பெயரில் 5 லட்சம் ரூபாய் மோசடியாக பணத்தை எடுத்துள்ளதாகவும் இதைக் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்திருந்த நிலையில் சிறப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு வங்கி மற்றும் கோவிலில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினர். அறங்காவலர் குழு விற்கும் பேரூர் ஆதனத்திற்கும் நடைபெற்று வரும் இந்த பனிப்போரால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர் இதைக் குறித்து பொதுமக்கள் கோரிகையில் தங்களுடைய முப்பாட்டன்களால் இந்த கோயில் உருவாக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது இந்த கோவிலில் தங்களை அனுமதிக்காமல் ஆதீன நிர்வாகிகள் அராஜகம் செய்து வருவதாகவும் கூலி வேலை செய்யும் தங்களிடம் ஒரு தேங்காயை 100 ரூபாய்க்கு விற்பதாகவும் இது தங்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில் தாங்களே வீடுகளில் இருந்து தேங்காயை எடுத்து வரும் பொழுது அதை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.காந்தலில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார், 5 ஏக்கர் நிலப்பரப்பில் துளசிமடம் எனப்படும் தட்சிணாமூர்த்தி மடம் அமைந்து உள்ளது. கடந்த, 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதன்பின்னர் பேரூர் ஆதீனம் மடாதிபதி மருதாச்சல அடிகளார், தட்சிணாமூர்த்தி மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், அவரை நீக்கி, மதுரை சொக்கலிங்க தம்பிரான் மடாதிபதி, நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார். இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மடாதிபதி மருதாச்சல அடிகளார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் கோவில் நிர்வாக பணிகளை கவனிக்கலாம் என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க வரவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கோவில் நிதியை கையாடல் செய்ததாக கோவில் அறங்காவலர் குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதை குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அறங்காவலர் குழு ரங்கசாமி தெரிவிக்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை நிர்வகிக்க ஆளில்லாததால் பேரூர் ஆதினத்திடம் முறையிட்டோம் இந்த ஆலயத்தை நல்லபடி நடத்தி கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டோம் இதன் அடுத்து இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வந்த பேரூர் ஆதீனம் சிறிது சிறிதாக கோவிலை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் பேரூர் ஆதீனத்திற்கும் கோவில் அறங்காவலர் குழு விற்கும் பனிப்போர் நடந்து வந்தது. இதில் பலமுறை ஆதினத்தை சேர்ந்தவர்கள் கோவிலை பூட்டியும் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அராஜக செயலில் ஈடுபட்டு வந்தனர் இதனை எதிர்த்து பொதுமக்களே பலமுறை போராட்டத்தை நடத்தியதாகவும் கூறினர் இது எப்படி இருக்க தங்களது அறங்காவலர் வங்கி கணக்கிலிருந்து 18 லட்சம் ரூபாய் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் கையாடல் செய்திருப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கை வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்களை கையில் போட்டுக்கொண்டு தங்கள் கையெழுத்து இல்லாமல் காசோலைகளை தயார் செய்து கோவையில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளதாகவும், மேலும் கோவில் காவலாளி பெயரில் 5 லட்சம் ரூபாய் மோசடியாக பணத்தை எடுத்துள்ளதாகவும் இதைக் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்திருந்த நிலையில் சிறப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு வங்கி மற்றும் கோவிலில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினர். அறங்காவலர் குழு விற்கும் பேரூர் ஆதனத்திற்கும் நடைபெற்று வரும் இந்த பனிப்போரால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர் இதைக் குறித்து பொதுமக்கள் கோரிகையில் தங்களுடைய முப்பாட்டன்களால் இந்த கோயில் உருவாக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது இந்த கோவிலில் தங்களை அனுமதிக்காமல் ஆதீன நிர்வாகிகள் அராஜகம் செய்து வருவதாகவும் கூலி வேலை செய்யும் தங்களிடம் ஒரு தேங்காயை 100 ரூபாய்க்கு விற்பதாகவும் இது தங்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில் தாங்களே வீடுகளில் இருந்து தேங்காயை எடுத்து வரும் பொழுது அதை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.