எடப்பாடி அருகே லிங்கமேடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த குஞ்சம்பாளையம் லிங்கமேடு ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா அதனை முன்னிட்டு இன்று தீர்த்த பட ஊர்வலம்
எடப்பாடி அருகே குஞ்சாம்பாளையம் லிங்கமேடு ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்... சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம் குஞ்சம்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கணபதி ஸ்ரீ முருகன் லிங்கமேடு ஸ்ரீ மாரியம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து புனித தீர்த்தக்குட ஊர்வலம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கல்வடங்கம் காவேரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு பம்பை மேல வாத்திய தாளங்கள் முழங்க எடப்பாடி அருகே குமராபாளையம் கல்படங்கம் பிரிவு சாலையான மூலப்பாதை பகுதியில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்தனர். இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் பெண்கள் குழந்தைகள் என அயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ கணபதி,ஸ்ரீ முருகன், லிங்கமேடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீர்த்து குடத்தை வைத்து பூஜைகள் நடைபெற்று பின்னர் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.