புளியம்பட்டி நகராட்சி ஓடையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

புளியம்பட்டி நகராட்சி ஓடையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

Update: 2024-10-20 06:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புளியம்பட்டி நகராட்சி ஓடையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார டானாபுதுார், நொச்சிக்குட்டை, தோட்டசாலை, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது. இதனால் தோட்ட சாலை, அம்மன் நகர் வழியாக செல்லும் மழைநீர் ஓடையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து வந்ததால், துர்நாற்றத்தால் மக்கள் தவித்தனர். விநாயகர் கோவில், பாண்டியன் கிணறு வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை நீர் ஓடையில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்படுவதால், ஒவ்வொரு மழையின் போதும் மழை நீர் வீடுகளில் புகுகிறது. சில நாட்களுக்கு முன் பலத்த மழையால் கழிவுநீருடன் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. தற்போதும் அதே நிலை ஏற்பட்டதுள் ளதாக, மக்கள் குற்றம் சாட்டினர்.

Similar News