தேனியில் போலீசாரின் தடையை மீறி மாநில செயற்குழு கூட்டம் நடத்த வருகை தங்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர்
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திருப்பூர் கர்ணன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டத்தை தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்த முடிவு செய்தனர், கட்சியினர் இரு பிரிவுகளாக உள்ளதால் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று கதிரவன் தலைமையிலான மற்றொரு பிரிவினர் புகார் தெரிவித்து இருந்தனர் இதனால் கூட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தனர் இதனால் தடையை மீறி மண்டபத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர் அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கூட்டம் நடத்த அனுமதி இல்லை மீறி சென்றால் கைது செய்யப்படும் என கூறியதால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஊர்வலமாக நடந்து சென்று சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர் பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கட்சி அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தி கொள்ளுங்கள் என கூறினர் இதனை தொடர்ந்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்