சங்கரன்கோவிலில் உளுந்து,பாசி விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்

உளுந்து,பாசி விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்

Update: 2024-10-20 09:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கே.ஆலங்குளம், வேப்பங்குளம், வாகைகுளம், செட்டிகுளம், சாயமலை, புதுக்குளம், கரடிகுளம், குருவிகுளம், கொக்குகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக மானாவாரி விவசாயிகள் உளுந்து, பாசி, தட்டாம்பயிறு, மக்காச்சோளம், மாட்டுத்தீவன நாற்றுகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை டிராக்டர் மூலம் விதைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நல்ல விளைச்சல் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News