திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த செல்வராணியிடம் இருந்து நேற்று 200 கிராம் கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீசாருக்கு பயந்து தன்னுடைய இருப்பிடத்தை தூத்துக்குடி தாளமுத்து நகருக்கு மாற்றி அங்கிருந்து திசையன்விளை பகுதிக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.