தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கல்:
மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொ.ம.தே.க., சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நேற்று மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் தலைமையில் 27 பஞ்சாயத்துகளை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்டத் துணைச் செயலாளர் ரஞ்சித்குமார், மாவட்டத் துணைத் தலைவர் தினேஷ், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ், ராஜா. பி.டி.ஓ., பால விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.