கரூர் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி.
கரூர் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி.
கரூர் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு, உதவி கோட்ட பொறியாளர் ராமநாதன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் ஞானபிரகாசம், பூங்கொடி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியை ஏற்றனர். அப்போது, சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட, ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதி மொழியை ஏற்க்கிறேன் எனவும், எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் எனக்கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.