தீபாவளி நாளில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

குமாரபாளையத்தில் தீபாவளி நாளில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2024-11-01 10:26 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தீபாவளி நாளில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தீபாவளி நாளான நேற்று காலை பட்டாசு கடை, இனிப்புகள் கடை, இறைச்சிக்கடை, துணிக்கடை, நகைக்கடை, மளிகை, ஓட்டல்கள், பேக்கரி, சாலையோர கடைகள்  உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை 11:30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். இந்த மழை மதியம் ஒரு மணி வரை நீடித்தது.

Similar News