வெள்ளகோவில் அருகே விபத்தில் முதியவர் பலி

வெள்ளகோவில் அருகே விபத்தில் முதியவர் பலி காவல்துறை விசாரணை;

Update: 2024-11-04 10:31 GMT
வெள்ளகோவில் அருகே விபத்தில் முதியவர் பலி
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம் மறவ மங்கலத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 72). வெள்ளகோவில் வேலகவுண்டன்பாளையம் சடைய பாளையத்தார் சாமிநாதன் தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். காளிமுத்து நேற்றும் வெள்ளகோவில் கடைவீதிக்கு சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இரட்டைக் கிணறு அருகே சென்றபோது அந்த வழியாக கோத்தகிரி மண்குறிச்சியை சேர்ந்த அருள் பிரகாஷ் (20) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் காளிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த காளிமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் குமார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருள் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News