அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பள்ளிபாளையம் நகர 17 வார்டு கட்சி கிளை சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி கிளை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி கட்சி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் சிறப்புரையாற்றினார் . பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு பகுதியில், நாகர்கோவில் எதிர் சந்து தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய சாக்கடையை கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் , ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக பைப்லைன் சாக்கடை கால்வாய் குறுக்கே அமைந்துள்ளனர். இதனால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மீண்டும் வீட்டிற்குள்ளே திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிப்பாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோர் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் காலதாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி கிளை செயலாளர்கள், கட்சி முன்னணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி பொறியாளர் ரேணுகாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்