ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாட்டையடி திருவிழா..
ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாட்டையடி திருவிழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா 24.10.24 அன்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதன் தொடர்சியாக கம்பம் நடுதல் பூவோடு பற்ற வைத்தல், பூவோடு எழுத்தல் இன்று காலை பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல் மற்றும் கோவிலை சுற்றி உருளைதண்டம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அம்சமாக சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல் நிறைவேறவும் மேலும் பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டியும்,பேய்பிடித்தல் காத்துகருப்பு நீங்கவும்,தொழில் விரித்தி அடையவும் கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையாள் 3 அடி வாங்கினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் சாட்டையால் அடி வாங்கி செல்கின்றனர்.இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கி சென்றனர்.மேலும் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். புதன்கிழமை அன்று அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், கெடா வெட்டுதல், மற்றும் அலகு குத்துதல், தொடர்ந்து வியாழக்கிழமை நடன நிகழ்ச்சி, உடற்கூறு வண்டி வேடிக்கை, எருதாட்டம் போன்றவை நிகழ்ச்சிகள் நடைபெற்று சனிக்கிழமை அன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த கோவிலில் திருவிழா ஏற்பாட்டை கோவில் தர்மகர்த்தா செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.