எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.

எடப்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு. இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுவதாக பேட்டியளித்தார்...

Update: 2024-11-06 07:06 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நவம்பர் 5ஆம் தேதி  மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான என்னும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களோடு அமர்ந்து அவரும் பயிற்சி வகுப்பை கவனித்தார். அதன் பிறகு ஆசிரியர்களிடம் பேசுகையில் மாணவர்களுக்கு கல்வி அறிவை விட அனுபவக் கல்வியும் கொடுக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சி பெரும் பங்கு வகிக்கிறது நான் பெருமை கொள்கிறேன். அதன் பிறகு ஆசிரியர்கள் மாணவர்களிடம் உரையாற்றினார் இந்த ஆய்வின்போது பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வசதியாக நவீன வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள கட்டிடங்களை விரைவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறக்க உள்ளார். மாணவ மாணவிகளை பெருமளவில் அச்சுறுத்தி வரும் போதை புலக்க நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் இந்த சமூகமும் சார்ந்து இதனை முன்னெடுக்க வேண்டும் பள்ளிகளில் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து போதனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் அதற்கு புராண கதைகளை கூறி அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்து வருகிறது. மடிக் கணினி திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பேசி வருவதை ஏற்க முடியாது,  தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட் போர்டு மூலமாக ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்படுவதால் மாணவர்களின் அறிவியல் மற்றும் விஞ்ஞான அறிவு பெரும் விதமாக பெரும் முயற்சி தமிழக அரசு எடுத்து வருகிறது,  இதனை செம்மைப்படுத்தும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து விஞ்ஞானக் கல்வியை கொடுக்க குழு அமைக்கப்பட்டு சிறப்பாக மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி வழங்கப்பட்டு வருகிறது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த அதிநவீன விஞ்ஞான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Similar News