வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-11-06 16:31 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி  விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள்  பழனிசாமி, ராம்குமார், குணசேகரன்  உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்ட்,  தினசரி காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில்  லாட்டரி விற்றது தெரியவந்தது. மார்க்கெட்  பகுதிக்கு சென்ற  போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த, பின்னால் பெயர் தெரிந்த,  தக்காளி விஸ்வநாதன், போலீசாரை கண்டதும் சீட்டுகளை போட்டு ஓடி விட்டார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சீட்டுகள் விற்ற வடிவேல்,  30, என்பவரை போலீசார் கைது செய்தனர். வீரமூப்பன், 59, விஷ்ணு, 24, ஆகிய இருவரையும் கைது செய்து, வெளிமாநில லாட்டரி சீட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்

Similar News