காங்கேயம் அருகே பேக்கரி கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி

காங்கேயம் அருகே பேக்கரி கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி. பணம் இல்லாததால் எடை போடும் இயந்திரம் மற்றும் ஹாட் பாக்ஸ் திருட்டு

Update: 2024-11-07 04:35 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சம்மந்தம்பாளையம் பிரிவு பகுதியில் மூர்த்தி (34)என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகின்றார். கடந்த வாரத்தில் தீபாவளி திருநாளை ஒட்டி கடை விடுமுறை விடப்பட்டது மீண்டும் திறக்கவே இல்லை. இந்த நிலையில் இன்று அவரின் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் கடை உரிமையாளர் மூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடைக்கு வந்து பார்த்த மூர்த்தி கடையின் பூட்டுக்கள் உடைத்து சட்டர் திறக்கப்பட்டு கடையில் உள்ளே இருந்த எடை போடும் இயந்திரம் மற்றும் ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் ஆகும். இது குறித்து ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News