மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை பொதுநல அமைப்பினர் கோரிக்கை மனு
மாவட்ட ஆட்சியரிடம் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை பொதுநல அமைப்பினர் கோரிக்கை மனு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் மகளிர் குழுக்கள் என்ற போர்வையில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பெண்களுக்கு கடன் வழங்கி அவர்களை இந்துக்கு மேற்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற வைத்து திரும்ப செலுத்த முடியாத அளவிற்கு தள்ளப்பட்டு விடுவதில்லை இதனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள பெண்களை அவர்களின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் குத்தியும் தற்கொலைக்கு தூண்டி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் வசூல் கெடுபிடிகளை முறைப்படுத்த வேண்டியும் சமீபத்தில் குமாரபாளையம் வட்ட மலையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட ஞானசேகரன் தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவனங்களின் மீது வழக்குப்பதிந்து உரிய நீதி வழங்கிடவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை அழைத்து ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி ரிசர்வ்பேங் வழிமுறைப்படி நிதிநிறுவனங்கள் நடந்துகொள்ளவேண்டியும் குமாரபாளையம் அனைத்துபொதுநல அமைப்புசார்பாக நாமக்கல் மாவட்டஆட்சியர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப. அவர்களிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது.."பஞ்சாலை" சண்முகம்,கே.ஏ.இரவி ".பரமன்" பாண்டியன் "விடியல்"பிரகாஷ் எம்.விஸ்வநாதன் ல.மா.செல்வராசு ஆகியோர்கள் நேரில்சென்று மனுகொடுத்தனர்