திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பிஎம்சி மார்க்கெட்டில் மொபைல் ஷோரூம் மணலிவிளையை சேர்ந்த மார்ட்டின் என்பவர் நடத்தி வருகின்றார். அவர் இன்று தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.