பி.ஜி.பி வேளாண்மை கல்லூரியில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு (Digital Crop Survey) செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு.

Update: 2024-11-09 13:06 GMT
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், அக்ரஹார மணப்பள்ளியில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் 06.11.2024 முதல் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வயலில் சாகுபடி செய்துள்ள பயிர்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 433 வருவாய் கிராமங்களில் 8,80,284 உப சர்வே எண்களில் நாமக்கல் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரியை சேர்ந்த 430 மாணவ, மாணவியர்கள் 7 வட்டங்களிலும், பவானி ஆப்பகூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியை சேர்ந்த 51 மாணவ, மாணவியர்கள் குமாரபாளையம் வட்டத்திலும் பங்கேற்று மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து வேளாண்மைத்துறையின் வேளாண் அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் அட்மா மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள், தோட்டக்கலைத்துறையின் தோட்டக்கலை அலுவலர்கள், துணை தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர்கள் (வணிகம்), வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் உதவி பொறியாளர்களும் கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு பதிவேற்ற பணி தொடங்கப்பட்டு அனைத்து கிராமம் வாரியாக சர்வே எண் மற்றும் உப சர்வே எண் வாரியாக சாகுபடி செய்துள்ள பயிர்கள் பயிர் சாகுபடி கண்க்கீடு மொபைல் செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிவடையும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து அரசு வழிகாட்டுதல்களை கடைபிடித்து பணியாற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி முதல்வர் கோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமசந்திரன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் பேபிகலா, கோவிந்தசாமி, நாசர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் பத்மாவதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News