மார்கழி முதல் நாள் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் மரகதலிங்கம் தரிசனம் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்செய்தனர்
திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் மார்கழி முதல் நாளை ஒட்டி மரகதலிங்க தரிசனம் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர் அதிகாலை முதலே இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் படையெடுத்த பக்தர்களால் பரபரப்பு;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் ஆண் பாதி பெண் பாதி உருவமாக அர்த்தநாரீஸ்வரராக அருபாலித்து வருகிறார் இத்திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் அதிகாலை 3:30 மணி முதல் மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 7 மணி வரை மரகதலிங்கம் பக்தர்களின் வழிபாட்டிற்காக மூலவர் சன்னதியில் அர்த்தநாரீஸ்வரர் பாதத்தில் வைத்து அபிஷேகங்கள் செய்யப்பட்டு தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த ஆண்டும் மார்கழி முதல் நாளான இன்று அபிஷேகங்கள் செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் இருந்து மலைக் கோவிலுக்கு வரத் தொடங்கினர். மக்களின் வருகையைத் தொடர்ந்து நுழைவு வாயில் முன்பு கேட் போல் ஒன்று அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்களை நிறுத்தி வைத்து ஒட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கேட்டை திறந்த உடன் அதிவேகத்துடனும் வளைவுகளில் கீழே இருந்து மலைக்கு சென்ற பக்தர்கள்ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் நிர்வாகத்தால் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் வேகத்துடன் வருகிறார்கள் என மற்ற பக்தர்கள் தெரிவித்தனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். கோவிலில் அதிக மக்கள் கூட்டம் இருந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மார்கழி முதல் நாளான இன்று அர்த்தநாரீஸ்வரருக்கும் மரகதலிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.