திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜோசப் மகன் ஆரோக்கியதாஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தபொழுது கரட்டலகன்பட்டியை சேர்ந்த மூக்கன் மகன் வேலு மற்றும் சந்தானம் இருவரும் போதையில் ஆரோக்கியதாஸை வழிமறித்து தாக்கியதால் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சையில் உள்ளார். அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்