வீரியம்பாளையத்தில் இளைஞர் தாக்குதல்
டியூப் லைட்டால் குத்தி தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பாலசுப்பிரமணியன் (45) இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி இவரது ஆடு ஒன்று அவரது வீட்டின் அருகே உள்ள சுப்பிரமணி என்பவரின் வீட்டின் தொட்டியில் உள்ள தண்ணீரை சென்று குடித்து உள்ளது. அப்போது சுப்பிரமணி பாலசுப்பிரமணியனை தகாத வார்த்தையால் திட்டி மரக்கட்டையால் அடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் aஅவரது மகன் வரதராஜ் 32, சௌந்தர பாண்டியன் 34, யோகபால் 30, மனைவி வரதராஜ் மனைவி நவநீதா 26. ஆகியோரும் தாக்கியுள்ளனர். இதனை கண்ட பாலசுப்ரமணியனின் மகன் ஜீவா அங்கு சென்று தனது தந்தையை காப்பாற்ற முயன்ற போது அவரையும் தாக்கி டியூப் லைட்டால் அவரது தோள்பட்டை மற்றும் விலா எலும்புதோள்பட்டை மற்றும் விலா எலும்பு பகுதியில் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.