நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்

Update: 2024-11-12 10:08 GMT
கோவை மாநகர காவல் துறையில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்படும் ‘போலீஸ் அக்கா’ திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ‘போலீஸ் அக்கா’ திட்டம். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பெண் காவலர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பார். மேலும், மாணவிகளுடன் நட்புறவை ஏற்படுத்தி, பாலியல் தொல்லை உள்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் காவல் துறையில் புகார் அளிக்க ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் ‘போலீஸ் அக்கா’வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக கியூ ஆர் கோடுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். இத்திடதபோலீஸ் அக்கா திட்டத்துக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், பலரும் தைரியமாக புகார்களை தெரிவிக்கின்றனர். புகார் தெரிவிக்கும் மாணவிகள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுவதால்அச்சமின்றி தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மாணவிகளால் புகாராக கொடுக்க முடிகிறது. வீடுகளிலும், ஆசிரியர்களிடமும் கூட சொல்ல முடியாத பிரச்சினைகளை மாணவிகள் அக்காவாக நினைத்து தங்களிடம் சொல்வதாக போலீஸ் அக்காக்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதனை செயல்படுத்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழக காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி தமிழ்நாடு அரசின் நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்ட துவக்க விழா திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனம் வளாகத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் ஐபிஎஸ் மற்றும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா ஐபிஎஸ் ஆகியோர் போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவிவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதிஉயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி இமயவரம்பன் குழந்தைகள் பாதுகாப்பு அலகுஅலுவலர்கள் ஆகியோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள்நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த323 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 99 கல்லூரிகள் ஆகியவற்றை சேர்ந்த 1810 மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேற்கு மண்டல தமிழ்நாடு காவல்துறை தலைவர் T.செந்தில் குமார் கூறியதாவது பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று மகாகவி பாரதியார் பாடியதற்கு ஏற்ப, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், எவ்வித தயக்கமும் இன்றி காவல்துறையினரின் உதவி கோரும் வகையில் தற்போது போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட 323 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 99 கல்லூரிகளுக்கும் 136 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு போலீஸ் அக்கா (சகோதரி) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்களாக பெண்கள் பாதுகாப்பிற்காக 1091, 181, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1098 மற்றும் 1930 சைபர் குற்றங்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்து 24 மணி நேரமும் செயல்படுத்தி வருகின்றார்கள். பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இன்றைய நவீன உலகில் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், கவன சிதறல்கள், மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து தங்கள் குடும்பத்தில் தாய், தங்கையிடம் தெரிவிப்பது போன்று போலீஸ் அக்கா திட்டத்தில் காவல்துறையினரிடம் தெரிவித்து, எவ்வித பிரச்சனையிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். தங்களின் பெயர் மற்றும் விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். பெண்களுக்கு கல்வி எதற்கு என கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் ஔவையார், காக்கை பாடினியார், நப்பசலையார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் கல்வியில் சிறந்து புலமை பெற்றிருந்தனர். பெண்கள் கல்வி கற்றால் அந்த குடும்பம் மட்டுமின்றி அச்சமுதாயம் முன்னேறும். அந்நாடு முன்னேறும். எனவே, பெண்கள் தங்கள் கல்விக்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு, தங்கள் திறமையையும், கல்வி தகுதியையும் உயர்த்தி கொண்டு, தற்போது மேடையில் அமர்ந்துள்ள மாவட்ட ஆட்சியர், காவல் துறை துணைத்தலைவர் போன்று இச்சமுகத்தில் உயர்நிலையை அடைய வேண்டும். மேலும், பெண்கள் பாதுகாப்பிற்காக வன்கொடுமை தடுப்புச்சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், மூத்த குடிமக்கள் பாதுகாப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் முன்னேற கல்வி முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நன்கு கல்வி கற்று பிறருக்கு முன்னோடியாக திகழ வேண்டும் .நேரில் செய்ய முடியாத எதையும் நெட்டில் செய்யாதீர்கள் அக்கா கனவில் வந்தால் நமக்கு நல்லது செய்யப் போவதாக பொருள் அக்கா நம் கனவில் கோபப்பட்டால் நாம் தவறு செய்திருக்கிறோம் என்று அர்த்தம் எனகனவுப் பலன்களை உதாரணம் காட்டி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.T.செந்தில்குமார் பேசினார் தொடர்ந்து, போலீஸ் அக்கா திட்டம் குறித்த (QR CODE POSTER) சுவரொட்டிகளை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.T.செந்தில்குமார், வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல கல்லூரி இணை இயக்குநர் டாக்டர் பி.சிந்தியா செல்வி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவிகள் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.

Similar News