சிவசேனா கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறப்பதற்கு அனுமதி கொடுக்காத போலீசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினரால் பரபரப்பு

முற்றுகை

Update: 2024-11-13 08:30 GMT
தேனி அருகே வடபுதுபட்டியில் சிவசேனா கட்சியின் மாவட்ட அலுவலகம் இன்று புதிதாக திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது, இதற்காக காவல்துறையினர் அனுமதி வேண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசேனா கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்திருந்தனர் ஆனால் கட்சி அலுவலகம் திறப்பதற்கு காவல்துறையினர் சார்பில் அனுமதி கொடுக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்து அலைக்கழிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது மேலும் சிவசேனா கட்சி இருக்கின்றதா அதற்கு நிர்வாகிகளா என்று போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக சிவசேனா கட்சியினர் தெரிவித்தனர் இதனால் இன்று கட்சி அலுவலகம் திறக்க முடியாமல் போனதால் அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு வருகை தந்தv கட்சியினர் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் தலைமையில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முன் அமர்ந்த முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன பின்னர் அல்லிநகரம் காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Similar News