சுக்காலியூர் அருகே நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
சுக்காலியூர் அருகே நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
சுக்காலியூர் அருகே நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியானகுப்பம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் வயது 36. இவர் டிசம்பர் 1ஆம் தேதி இரவு 10 மணியளவில், கரூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் சுக்காலியூர் பகுதியில் செயல்படும் அபி பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நடந்து சென்ற காளியப்பன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காளியப்பனுக்கு தலை மற்றும் முன் நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த காளியப்பனின் மனைவி சுவாதி வயது 34 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நடந்து சென்ற காளியப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.