திருமாநிலையூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சருக்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

திருமாநிலையூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சருக்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

Update: 2024-12-05 06:56 GMT
திருமாநிலையூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சருக்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மலர்கள் தூவி மரியாதை செய்தனர். தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி.ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு காலமானார். இன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் அவரது 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு தலைமையில் மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மண்டல தலைவர் சத்யநாதன்,மண்டல பொருளாளர் மணிகண்டன், மண்டல இணைச் செயலாளர் அர்ஜுனன்,கரூர் கிளை தலைவர் கோவிந்தராஜ் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

Similar News