ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

Update: 2024-12-05 11:40 GMT
ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல். மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க பயிற்சிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் "பெண் குழந்தைகளை பாதுகாப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா மற்றும் பாதுகாப்பு அலுவலர் பார்வதி உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் திட்டங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Similar News