பண்ணாரி செக்போஸ்ட் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
பண்ணாரி செக்போஸ்ட் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு;
பண்ணாரி செக்போஸ்ட் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தினசரி பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. அதிபாரம் ஏற்றிக் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பண்ணாரி மற்றும் ஆசனூர் செக்போஸ்ட்களில் உயரமான லோடு ஏற்றிவரும் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு கம்பி அமைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிக உயரம் ஏற்றி வந்த மினி லாரிபண்ணாரி செட் போஸ்டில் இருந்த தடுப்பு கம்பியில் சிக்கிக்கொண்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.