சத்தியமங்களம் அருகே குப்பையில் மாத்திரை குவியல் ஆய்வு செய்ய கோரிக்கை
சத்தியமங்களம் அருகே குப்பையில் மாத்திரை குவியல் ஆய்வு செய்ய கோரிக்கை;
சத்தியமங்களம் அருகே குப்பையில் மாத்திரை குவியல் ஆய்வு செய்ய கோரிக்கை சத்தியில் குப்பையில் மாத்திரைகள் குவியலாக கொட்டியது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியில் இருந்து அரசு கல்லூரி மற்றும் மாதிரி பள்ளிகளுக்கு செல்லும் வழியில் காசிக்காடு பள்ளத்தில் மருது மாத்திரைகள் காலி மருந்து பாட்டில்கள் குயிலாக குப்பையில் கொட்டப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தங்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற அச்சத்தில் அங்கிருந்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது குப்பையில் மாத்திரைகள், சின்ன பாட்டில்கள், காலி அட்டைகள் கொட்டப்பட்டிருந்தது. அதில் இருந்து நோய் பரவும் என உடனிருந்தவர்கள் சொன்னதால் அச்சத்தில் அங்கிருந்து சென்று விட்டோம் . மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரை எங்கிருந்து வந்தது என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.