திமுக வழக்கறிஞர் அணித்தலைவரை தவறாக சித்தரித்த மாத இதழின் நகலை எரித்து போராட்டம்
திமுக வழக்கறிஞர் அணித்தலைவரை தவறாக சித்தரித்த மாத இதழின் நகலை எரித்து போராட்டம்;
கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது அண்ணா சிலை அருகே திமுகவினர் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இது குறித்து அரசியல் முத்திரை என்ற பத்திரிக்கையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கஜா கோபி என்பவர் பேட்டி கொடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது அதில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவரின் கணவரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவருமான சுரேஷ்பாபு தன்னை குடித்துவிட்டுதாக்கியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் குடிப்பழக்கமே இல்லாத சுரேஷ் பாபு மீது அவதூறாக குடித்துவிட்டு தாக்கியதாகவும் தமிழக அரசின் கொள்கைகளை செயல்பாடுகளை திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கும் சுரேஷ் பாபு மீது அவதூறு கற்பிக்கும் வகையில்செய்தி வெளியிட்ட அரசியல் முத்திரை பத்திரிக்கை சுரேஷ்பாபுவிடம் கருத்து கேட்காமல்செய்தி வெளியிட்டு இருப்பதால் அந்த பத்திரிகையை எரித்து போராடுவதாகவும் பொய்யான கருத்தை பரப்பிய கஜா கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் நகர திமுக துணைச் செயலாளர் ஆன ராஜவேல் தலைமையில் கைலாசம்பாளையம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பத்திரிகையின் நகலை எரித்தனர். போராட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் செல்விராஜவேல் உள்ளிட்ட பகுதி திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.மறியல் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.