பேருந்துகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்;

Update: 2024-12-07 13:00 GMT
பள்ளிபாளையம் வழியாக சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ,மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கு என  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு சென்று வருகிறது. இந்நிலையில் பேருந்துகளில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்தி வருவதாக, தொடர்ந்து குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி எழுப்பியதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறை பிடித்தனர் . இது குறித்து தொலைக்காட்சி,ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள் மலர்விழி ,செந்தில்வேல் பெருமாள் உள்ளிட்டோர் சனிக்கிழமை அன்று  பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர் .இதில் 15 அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சோதனை மேற்கொண்டதில், அதில் 11 வாகனங்களில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தியது தெரியவந்தது .இதனை அடுத்து அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . இதன் காரணமாக பள்ளிபாளையம் பிரதான சாலையில் பரபரப்பாக காணப்பட்டது ..தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தெரிவித்தார் ..

Similar News