திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபம் திரி வைப்பு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சியில் உள்ள ராட்சத கொப்பரையில் 300 மீட்டர் நீளமுள்ள திரி வைப்பு;

Update: 2024-12-08 04:13 GMT
தென் கயிலாயம் என‌ போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்று. மலைக்கோட்டை உச்சியின் மேல் உள்ள கொப்பரையில் ராட்சத திரி மூலம் தீபம் ஏற்றப்படும். அந்தவகையில் வருகிற 13-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடிஉயர செப்புக் கொப்பரையில் 13-ம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 300 மீட்டர் நீளமுள்ள பருத்தி துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட திரி பக்தர்கள் மற்றும் திருக்கோவில் அடியார்களால் சுமந்து செல்லப்பட்டு பக்தி சிரத்தையுடன் அரோகரா கோஷத்துடன் வைக்கப்பட்டது. இந்த திரியில் 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, நெய் ஆகியவைகளை ஊற்றி ஊறவைத்து 13ம் தேதி மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News