வெள்ளகோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
வெள்ளகோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் மருத்துவ அலுவலர் துவக்கி வைத்தார்;
வெள்ளகோவில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நகராட்சி மேற்கு நடுநிலைப்பள்ளியில் நடத்திய இந்த முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் காளீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் நகராட்சியில் பணிபுரியும் 110 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவக் குழுவினரால் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்படும் சிகிச்சை ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்பட்டது. காசநோய் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு தூய்மை பணியாளருக்கு மருத்துவ பதிவு அட்டை வழங்கப்பட்டது. முகாமில் நகராட்சி சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.