தாராபுரம் நகராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி நகராட்சித் தலைவர் ஆய்வு

தாராபுரம் 12வது வார்டு பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சித் தலைவர் ஆய்வு;

Update: 2024-12-09 00:17 GMT
தாராபுரம் நகராட்சி 12வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் வார்டு உறுப்பினருக்கும், நகர மன்ற தலைவருக்கும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியை நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார். இதில் 12-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவி அபிராமி கார்த்திக், நகராட்சி பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News