கண்டியன் கோயில் அரசு பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டி

கண்டியன்கோவில் ஊராட்சி அரசு பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி;

Update: 2024-12-09 00:35 GMT
பொங்கலூரை அடுத்துள்ள கண்டியன் கோவில் ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி நடந்தது. போட்டிகளை வட்டார கல்வி அலுவலர்கள் பூங்கொடி மற்றும் சியாமளா ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி தலைமை தாங்கினார். விழாவில் மேலும் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 50 லட்சம் நிதி உதவி வழங்கிய பப்பிஸ் நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் துளசி மணி, ஊராட்சித் துணைத் தலைவர் மூர்த்தி, பாசன சபை தலைவர் பாலசுப்ரமணியம், பவித்ரா ஆயில் மில் அர்ச்சுனன், வக்கீல் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் நிரஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர். தாயம் பாளையம் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Similar News