திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ அறிக்கை
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டார்;
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ள ஜெயராமன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்த ஒரு வரி உயர்வையும் பொதுமக்களின் மீது சுமத்தவில்லை. திமுக அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகளில் கடுமையான வரிச்சுமையை பொதுமக்கள் மீது சுமத்தி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கடந்த 3ஆம் தேதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.தொடர்ந்து திருப்பூரில் வியாபாரிகள் கடை நடத்த முடியாத நிலை உள்ளது. வணிகர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி உள்ளதை கண்டித்து 8ம் தேதி நேற்று முதல் 10 நாட்களுக்கு கடைகளில் கருப்பு கொடி கட்டப்படும் எனவும் வருகிற 18-ஆம் தேதி திருப்பூரில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் தனது முழு ஆதரவினை வழங்கும். மேலும் வருகிற 16-ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களுக்கு போராட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவரவர் இல்லங்கள், அலுவலகங்கள், கடைகள் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.