போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு பேரணி
மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (டிச.9) நடைபெற்றது.;
மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (டிச.9) பதாகைகள் ஏந்திய போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன பேரணியை மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையர் திருமலை குமார்,உதவி ஆணையர்கள் செல்வின் இளமாறன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி நந்தகுமார் சோபனா கார்த்திக் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.பேரணியானது ஆர்ச்சிலிருந்து துவங்கி ஜெயவிலாஸ், தெற்கு வாசல், சப்பாணி கோவில், கிரைம் பிரான்ச், வழியாக பெரியார் பேருந்து நிலையம் சென்றடைந்தது.