காங்கேயம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

காங்கேயம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் துணைத் தலைவர் கமலவேணி ஆகியோர் தலைமை தாங்கினார்;

Update: 2024-12-10 13:52 GMT
காங்கேயம் நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவை இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமை காங்கேயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர். முகாமிற்கு நகர மன்ற தலைவர் சூரிய பிரகாஷ், துணைத் தலைவர் கமலவேணி ஆகியோர் தலைமை தாங்கினார். மருத்துவ முகாமில் சுமார் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். மேலும் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் சரவணன், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News