திருட்டு வழக்கு - ஒருவர் கைது !
வீடு புகுந்து தங்க நகை திருட்டு - சுமார் 4¼ சவரன் தங்க நகையை பறிமுதல் கோவை மாவட்ட காவல் துறையினர் !
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பாபு டேனியல் என்பவர் கடந்த 02.12.2024 அன்று அவரது வீட்டில் உள்ள ஏசியை வேலை பார்ப்பதற்காக ஏசி மெக்கானிக்கை அழைத்து வேலை பார்த்துள்ளார். வேலைக்குச் சென்ற அவரது மனைவி வந்து பார்த்தபோது, ட்ரெஸிங் டேபிள் டிராவிலிருந்த சுமார் 4¼ சவரன் தங்க நகை திருடு போனது தெரியவந்து,இது தொடர்பாக அவர்கள், சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசாரணை செய்து வந்த நிலையில்,நேற்று தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பவரை கைது செய்து,சுமார் 4¼ சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.