பைக் மீது டெம்போ மோதி சினிமா ஸ்டூடியோ ஊழியர் பலி
பைக் மீது டெம்போ மோதி சினிமா ஸ்டூடியோ ஊழியர் பலி
அம்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (31), சினிமா ஸ்டூடியோ ஊழியர். நேற்று காலை வேலைக்கு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையில் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் இவர் மீது வேகமாக மோதியதில் தூக்கி வீடப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டெம்போ டிராவலர் வாகன டிரைவர் ரமேஷ் (44) என்பவரை கைது செய்தனர்