பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவில் இருந்து தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்கொடுத்தவனிதம், கமலாபுரம், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், மன்னார்குடி, நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, இடும்பாவனம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12.12.2024) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.