திருவாரூரில் பதிவாகியுள்ள அதிகபட்ச மழை அளவு.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரவு முதலே பரவலாக கன மழை பெய்து வருகிறது அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது இதில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழையும் குறைந்தபட்சமாக 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் திருவாரூரில் 7 சென்டிமீட்டர், நன்னிலத்தில் 6 சென்டிமீட்டர் நீடாமங்கலம் மற்றும் குடவாசலில் தலா 5 சென்டிமீட்டர், வலங்கைமானில் 4 சென்டிமீட்டர், முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடியில் தல 6.6 சென்டிமீட்டர், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.