பெருந்துறையில் தூய்மை பணி தீவிரம்!!

முதல்வர் ஸ்டாலின் ஈரோடு வருகையொட்டி பெருந்துறையில் தூய்மை பணி தீவிரம்!!

Update: 2024-12-12 03:03 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19, 20 ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். 19ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்து அங்கிருந்து காரில் ஈரோடு வருகை தருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி (தெற்கு), பால் சின்னசாமி (வடக்கு), பெரியசாமி (கிழக்கு) மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தாரை, தப்பட்டை முழங்க பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதல்வர் வருகை ஒட்டி மொத்தம் 20 இடங்களில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதல்வரை வரவேற்று ஆங்காங்கே பிரமாண்டமான கட் அவுட்டுகள், தோரண வளைவுகள், கொடிகள், பேனர்கள், பிளக்ஸ் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் வரும் பாதையில் சென்டர் மீடியன்களுக்கு வர்ணம் பூசும் பணியும், ரோட்டில் கிடக்கும் கல், மண், குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியிலும் தூய்மை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சென்டர் மீடியன்களில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் பேட்ச் ஒர்க் பணியும், வேகத்தடைகளும் அகற்றப்பட்டு வருகிறது. பெருந்துறை நகர் பகுதிகளில் நீண்ட காலமாக சாலையின் மையப்பகுதியில் தேங்கி கிடந்த மணல் குவியல்கள் அகற்றும் பணியும், சென்டர் மீடியன்களில் வர்ணம் பூசும் பணியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்று வருவதால் பெருந்துறை நகரம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

Similar News